ஊர்மிளா தன்னிச்சையாக விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரங்கீலா, இந்தியன், ஜுடாய், கோன், சத்யா, பூத் உள்லிட்ட ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஊர்மிளா.
40 வயதை கடந்த நிலையில், தான் திருமணம் செய்துக் கொண்டார்.
தன்னை விட 10 வயது இளையவரான மோஷின் அக்தரை திருமணம் செய்துக் கொண்ட நிலையிலும் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை.
இந்நிலையில், ஊர்மிளா மட்டுமே நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்குத் தொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், அது பற்றியும் ஊர்மிளா இன்னமும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
மேலும், தன்னை விட 10 வயது குறைவான இஸ்லாமியரான மோஷின் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதாக கசிந்த தகவல் தான் நடிகை ஊர்மிளா இப்படியொரு அதிரடி நடவடிக்கையை எடுக்க காரணம் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.