இணையவழி வியாபாரம் என்ற பெயரில் ரூ. 12.6 மில்லியன் மோசடி – 36 வயது நபர் கைது!

இணையவழி வியாபாரம் என்ற பெயரில் ரூ. 12.6 மில்லியன் மோசடி – 36 வயது நபர் கைது!

இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண பிரிவு கைது செய்துள்ளது.

டெலிகிராம் (Telegram) செயலி மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், இணையவழியில் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி 12,691,033 ரூபாயை மோசடி செய்தமை தொடர்பாக கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண பிரிவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வடமேல் மாகாண பிரிவு விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அதற்கமைய மோசடி செய்யப்பட்ட பணத்தில் 5 இலட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கிற்கு வைப்புச் செய்து கொண்ட நபர் ஒருவர், பண மோசடி மற்றும் அதற்கு ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபராவார்.

 

இச்சம்பவம் தொடர்பில் கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin