தேனைப் போல் தித்திப்பை வேறு எதிலும் ருசிக்க முடியாது. ஆனால், தற்போது தேனை விட தேனடைக்கு அதிக மதிப்பு உள்ளது.
தேனடை என்றால் தேன் கூடு.
இக் கூட்டிலேயே தேனீக்கள் மகரந்தம் மற்றும் தேனை சேமித்து வைக்கும்.
தேன் கூட்டிலிருக்கும் தேனில் புரதங்கள், நீர், மகரந்தம், தாதுக்கள், குளுக்கோஸ், கரிம அமிலங்கள், என்சைம்கள் போன்றன தாராளமாக உள்ளன.
இதனை உண்ணும்போது பக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடும் வலிமை அதிகரிக்கும்.
தும்மல், சளி, கண்களில் நீர் வடிதல் போன்றவற்றுக்கும் தேனடை மென்று உண்பது நன்மையளிக்கும்.