நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமண அழைப்பிதல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற ஹீரோவாக வலம் வந்தார்.
சினிமாவில் மட்டுமின்றி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.
ஒருகட்டத்தில் தனது மகனுக்கு தசை சிதைவு நோய் வர இந்தியாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
அங்கு தனது மகனுக்கு சிகிச்சை அளித்து அவருக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறார்.
அவ்வப்போது இந்தியா வரும் அவர் சில படங்களில் மட்டும் நடித்திருக்கிறார்
சூழல் இப்படி இருக்க அவரது மூத்த மகன் தனுஷுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. திருநெல்வேலியில் பெண் எடுத்திருக்கிறார்கள். இவர்களது திருமணம் ஜப்பானில் நடக்கவிருக்கிறது.
இந்நிலையில் தனுஷின் திருமண அழைப்பிதழ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவரது திருமண அழைப்பிதழ் பழங்கால ஓலைச்சுவடி வடிவில் புதுமையாக இருக்கிறது.