ஆனந்த் அம்பானிக்காக மும்பைக்கு பறந்து வந்த ஜான் சீனா

ஆனந்த் அம்பானியின் (Anant Ambani) திருமணத்தில் கலந்து கொள்ளவதற்காக ஜான் சீனா மும்பை வந்துள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் இன்று(12) திருமணம் நடைபெறவுள்ளது.

இவர்களுக்கு 2023ஆம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இன்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.

இதில், பல பிரபலங்கள் மற்றும் உலக பணக்காரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில், ஜான் சீனா மும்பை வந்துள்ளார்.

இது குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Recommended For You

About the Author: admin