ஐக்கிய நாடுகள் கவ்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அஸுலே, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரை அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
இப்பயணத்தின் போது பணிப்பாளர் நாயகம் அஸுலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பாரக பாலசூரிய ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாட உள்ளார்.
நெலும் பொகுண அரங்கத்தில் இடம்பெற உள்ள யுனெஸ் கோ அமைப்பில் இலங்கையின் அங்கத்துவத்திற்கான 75ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதுடன், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சிறப்புமிக்க தளங்களையும் பார்வையிட உள்ளார்.