23 வயது பெண்களுக்கான National Super League போட்டிகளில் மன்னாரைச் சேர்ந்த சயந்தினி தனது அறிமுகப் போட்டியில் விளையாடியுள்ளார்.
கொழும்பு அணிக்காக விளையாடும் அவர் நேற்றைய அறிமுகப் போட்டியில் ஆரம்ப பந்து வீச்சாளராக செயற்பட்டிருந்தார்.
இந்தப் போட்டியில் இரண்டு ஒவர்களை வீசிய சயந்தினி வெறும் 10 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில், தொடர்ச்சியாக பெண்களுக்கான கடினப்பந்து போட்டிகளில் சிறந்த முறையில் செயல்பட்டுவரும் சயந்தினி பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.