மோடி தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி: அரசியல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர்

இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300 இடங்களை கைப்பற்றும் என அரசியல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர் கணிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆளும் கட்சி வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் பாரியளவில் தோல்வியை எதிர்கொள்ளவில்லை, அதேசமயம் தெற்கு மற்றும் கிழக்கில் முன்னேற்றம் காண்பதற்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களை பெற்றுக்கொண்ட போதிலும், அதில் 250 இடங்கள் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வீதம் கணிசமாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், மோடிக்கு எதிராக நாட்டில் பரவலான கோபம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர் சமூகத்தின் ஒரு பிரிவினரைத் தவிர்த்து, அவரது செயல்திறனில் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும் சரி, பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியாக இருந்தாலும் சரி சமூகத்தின் பெரும் பகுதியினர் ஏமாற்றத்தையே அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பிரதமருக்கு எதிராக பரவலான கோபம் இருப்பதாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியிடம் இருந்து வெளிப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அடுத்து யார் வந்தாலும், நரேந்திர மோடியை தோற்கடிக்க வேண்டுமென்ற உணர்வு தற்போது இல்லை எனவும் அரசியல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin