பிரிட்டிஷ் ஏயார்வேஸ் கொழும்புக்கு மீண்டும் நேரடிப் பறப்புகள்!

பிரிட்டிஷ் ஏயார்வேஸ் கொழும்புக்கு மீண்டும் நேரடிப் பறப்புகள்! மத்திய கிழக்கிற்குப் பதில் ஆசியாவிற்கு மகுடம்

சர்வதேச வானூர்திப் போக்குவரத்துத் துறையில் முன்னணி வகிக்கும் ‘பிரிட்டிஷ் ஏயார்வேஸ்’ (British Airways), 2026 குளிர்காலப் பருவத்தை இலக்காகக் கொண்டு தனது பயண வழித்தடங்களில் பாரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் புதிய நீண்டதூரப் பயணங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

🇱🇰🇬🇧கொழும்பு மற்றும் மெல்பேர்னுக்குப் புதிய சிறகுகள்!

இலங்கைச் சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்டும் வகையில், 2026 அக்டோபர் 23 முதல் லண்டன் கட்விக் (Gatwick) விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கான நேரடிச் சேவைகள் ஆரம்பமாகவுள்ளன. வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் இந்த விமானங்கள் இயக்கப்படும். மாலை 5.30 மணிக்கு லண்டனில் புறப்படும் விமானம், அடுத்த நாள் காலை 9 மணிக்கு கொழும்பைச் சென்றடையும்.

 

🇬🇧➡️🇦🇺அதேபோல், 2027 ஜனவரி 9 முதல் லண்டன் ஹீத்ரோவிலிருந்து கோலாலம்பூர் ஊடாக ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கான தினசரிச் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 

🇱🇰 “கொழும்பு ஒரு சொர்க்கம்” – வியக்கும் உலகப் பயணி!

சுமார் 120 நகரங்களுக்குப் பயணம் செய்துள்ள பிரபல சுற்றுலாப் பயணி லிடியா ஸ்வின்ஸ்கோ (Lydia Swinscoe), கொழும்பு நகரின் தனித்துவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில்:

“வெள்ளை சீருடை அணிந்த ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் நண்பகலில் வீடு திரும்பும் அந்த அழகிய தருணத்திற்குப் பின், கொழும்பு ஒரு வசீகரமான தாளகதிக்கு மாறும். ‘கொழும்பு 07’ இன் பசுமையான வீதிகள், ‘கொம்பனித் தெருவின்’ வரலாற்றுச் சின்னங்கள் என ஒவ்வொரு இடமும் அற்புதம். கைகளால் பிசைந்து உண்ணும் ‘ரைஸ் அண்ட் கறி’, வீதியோரக் கடைகளில் கிடைக்கும் பால் தேநீர் மற்றும் மாலையில் வரும் ‘சூன் பானு’ (Tuk-tuk bakery) என கொழும்பு உண்மையிலேயே ஒரு சொர்க்கம்,” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

 

🏜🐪மத்திய கிழக்கு நெருக்கடியும் மூலோபாய மாற்றமும்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக அம்மான், பஹ்ரைன், துபாய், டோஹா மற்றும் டெல் அவிவ் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளை பிரிட்டிஷ் ஏயார்வேஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. 2026 மே மாதம் வரை இந்தத் தடைகள் நீடிக்கக்கூடும் எனத் தெரிகிறது. இருப்பினும், அபுதாபிக்கான சேவைகள் மீண்டும் அக்டோபர் 25 முதல் ஆரம்பிக்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

பயணிகள் தற்போது பாதுகாப்பான மற்றும் மாற்றுச் சுற்றுலாத் தலங்களை விரும்புவதால், பேங்கொக் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்களுக்கான மேலதிக விமான சேவைகளும் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.

 

2026 குளிர்காலத்திற்கான ஏனைய முக்கிய மாற்றங்கள்!

🌍🐘கரிபியன் தீவுகள்: பார்படாஸ், செயின்ட் லூசியா மற்றும் கிரெனடா ஆகிய நாடுகளுக்கு கெட்விக்கிலிருந்து தினசரி விமானங்கள்.

🇺🇸🗽அமெரிக்கா: நியூ ஓர்லியன்ஸ், பால்டிமோர் மற்றும் ஹூஸ்டன் ஆகிய நகரங்களுக்கான விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

🏯🌏ஆசியா: ஜப்பானின் டோக்கியோ (ஹனேடா) மற்றும் இந்தியாவின் டெல்லி ஆகிய நகரங்களுக்கான சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

 

⚠❗❗எச்சரிக்கை! பிரிட்டிஷ் ஏயார்வேஸ் பெயரில் போலி நபர்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் பணத்தைக் கோரி மோசடிகளில் ஈடுபடக்கூடும் என்பதால், பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: admin