Oyo ஓட்டலாக மாறும் ரயில்கள்.. பாத்ரூம் சென்ற போர்ச்சுக்கல் பெண்.. கதவை தட்டிய காமுகன்! ஆடிப்போன ஜனம்.
இந்தியாவின் பொதுப்போக்குவரத்து முதுகெலும்பாக கருதப்படும் ரயில்வே துறை, சமீபகாலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது..
குறிப்பாக, ரயில்களில் இளம் ஜோடிகளின் முகம் சுளிக்க வைக்கும் நடவடிக்கைகள் மற்றும் அத்துமீறல்கள் காரணமாக, ரயில்கள் ஓயோ ஓட்டல்கள் போல மாறி வருகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளன. இந்நிலையில் ஒரு வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது?
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், இந்திய ரயிலில் பயணம் செய்தபோது இளைஞர் ஒருவரால் பின்தொடரப்பட்டு, கழிவறை வரை சென்று அச்சுறுத்தப்பட்ட சம்பவம் பாதுகாப்புக் குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது..
போர்ச்சுக்கல் நாட்டு பெண்
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த அந்தப் பெண், இந்தியாவின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்ப்பதற்காக சுற்றுலா வந்திருந்தார்.. அவர் தனது பயணத்தின் ஒரு பகுதியாக ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர், அந்த பெண்ணையே தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்..
அந்த பெண் ரயிலில் ஏறி தன்னுடைய சீட்டில் உட்கார்ந்தபோது, அங்கிருந்து நகர்ந்தபோதும்கூட, அந்த இளைஞர் விடாமல் பெண்ணையே ஃபாலோ செய்து போயிருக்கிறார்.. ஒரு கட்டத்தில், அந்தப் பெண் ரயிலில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.. அங்கேயும் வந்து அந்த இளைஞர் தனது அத்துமீறலை தொடர்ந்துள்ளார்..
ரயில் பாத்ரூம்
இதை பார்த்து அந்த பெண் பயந்து போயுள்ளார்.. கழிவறைக்குள் அப்பெண் இருந்தபோது, அந்த இளைஞர் வெளியே இருந்து கழிவறை கதவை திறக்க முயற்சி செய்துள்ளார்.. கதவை பலமுறை பலமாக தட்டியும், அதை திறக்க முயன்றதை கண்டு அந்தப் பெண் கடும் அச்சத்தில் உறைந்தே போனார். உடனடியாக இது குறித்து புகார் அளித்துள்ளார்..
பெண் அளித்த தகவலின் பேரில், ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அந்த இளைஞரை அடையாளம் காணும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன..
ரயிலில் ஒரு வெளிநாட்டுப் பயணிக்கு, அதுவும் பொது இடத்தில் இத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது ரயில்வே பாதுகாப்பின் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது..
ஓயோ ஓட்டல் ரூம்கள்
சமீபகாலமாக ரயில்களில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருவதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது.. ஏற்கனவே ரயில்களில் இளம் ஜோடிகள் வரம்பு மீறி நடப்பதும், பொதுவெளியில் சக பயணிகளுக்கு முகசுழிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதும் ஓயோ ஹோட்டல்கள் போன்ற சூழலை உருவாக்கி வருவதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன..
இத்தகைய சூழலில், ஒரு படி மேலே போய் வெளிநாட்டு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், பாதுகாப்பிலும் கை வைக்கும் அளவிற்குச் சமூக விரோதிகள் துணிச்சல் பெற்றுள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது..
ரயில்வே நிர்வாகம்
இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.. இது போன்ற சம்பவங்கள் சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதோடு, சுற்றுலாத்துறையையும் பாதிக்கக்கூடும்.. எனவே, ரயில்களில் பாதுகாப்புப் படையினரின் ரோந்துப் பணியை அதிகப்படுத்த வேண்டும் என்றும், இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

