உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல் என யாழ்.கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது பல்வேறு இடங்களில் இடம்பெற்று வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சிப் பரிமாற்ற நிகழ்வுகளை ஆட்சியாளர்கள் தடுக்க முயல்வது குறிப்பாக கிழக்கில் சம்பூர் பகுதியில் இந்நிகழ்வுகளில் பங்கெடுத்தவர்களை இரவிரவாகக் கைது செய்து தடுத்து வைத்திருப்பது மிக மோசமான மனித உரிமை மீறல் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இவ்வாறு நினைவு கூரும் நிகழ்வுகளைத் தடுப்பதும் , கஞ்சி காய்ச்சி பரிமாறியவர்களை கைது செய்வதும் நாட்டில் நீதியை நிலைநாட்டுவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பாரிய பின்னடைவு என யாழ்.கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வலியுறுத்துகின்றது.
குறித்த அறிக்கையின் பிரதி பின்வருமாறு,