சிஏஏ திருத்தச் சட்டம்: முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்

சிஏஏ (CAA) எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு இந்திய மத்திய அரசு குடியுரிமை சான்றிதழ் வழங்கியுள்ளது.

மத்திய உள்துறைச் செயலர் ஸ்ரீ அஜய் குமார் பல்லாவினால் இந்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்நாட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் அனுமதி பெறப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 திகதிக்குள் இந்தியாவுக்கு வருகைத் தந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

அவர்களிடம் எதுவித ஆவணங்களும் இல்லாத பட்சத்திலும் குடியுரிமை வழங்கப்படும்.இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து இஸ்லாமியர்களும் அவர்களுக்கு ஆதரவானோர்களும் தொடர் போராட்டங்கில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி இந்த சட்டம் அமுல் படுத்தப்பட்டதுடன் சட்டத்துக்கான விதிகளையும் மத்திய அரசு அறிவித்தது. மேலும், குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறை முழுமையாக ஒன்லைன் முறையில் இடம்பெறும் என்பதும் குறிப்பதக்கது.

Recommended For You

About the Author: admin