செயலிழந்திருந்த பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் அதற்கான காரணத்தை மெடா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்ஜர் செயலிகள் செயலிழந்ததாக மெடா நிறுவனம் அறிவித்துள்ளது.
பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளம் மீள இயங்கத் தொடங்கியுள்ளது
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மேசன்ஜர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீளவும் திரும்பியுள்ளது. முடக்கத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை.
உலகம் முழுவதும் பேஸ்புக் முடங்கியது
உலக முழுவதும் பேஸ் புக் எனும் முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை திடீரென செயலிழந்துள்ளன.
அதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. பேஸ்புக் நிறுவனம் செயலழிப்பிற்கான காரணத்தை வெளியிடவில்லை.