கருணா போன்றவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை: சாணக்கியன் எம்.பி

இலங்கை தமிழரசுக் கட்சி ஜனநாயக ரீதியான கட்சியென்பதுடன் ஜனநாயக ரீதியாகவே செயற்படும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனைவருக்கும் கருத்து தெரிவிப்பதற்கான ஜனநாயகத்தினை தமிழரசுக் கட்சி வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இன்றைய தினம் மாலை இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட கிளையின் நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“கட்சிகள் பல இன்று மநாடுகளை நடாத்துகின்றது. ஆனால் அக்கட்சிகளின் மாநாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு தொடர்பிலும் தலைமை தெரிவு தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக கவனம் செலுகின்றார்கள் என்றால் அது தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியதுவமானது என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளமுடியும்.

கருணா போன்றவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை யாரும் செவிமடுப்பதில்லை. அவர் வருவதையும் கருத்து தெரிவிப்பதையும் யாரும் கருத்திற் கொள்வதில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin