கேரளாவுக்குச் செல்லும் அர்ஜென்டினா அணி

2025ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள நட்புமுறை ஆட்டங்களில் பங்கேற்க அர்ஜென்டினா அணி இந்தியாவின் கேரளா மாநிலத்துக்கு வருகை தர உள்ளதாக அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வி.அப்துரகிமான் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஒக்டோபரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கேரளாவிற்கு வருகைதரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

”அர்ஜென்டினா கால்பந்துச் சங்கத்துடன் இணையவழியில் நடத்தப்பட்ட சந்திப்பின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேரள அரசு விடுத்த அழைப்பை ஏற்று, ஜூன் மாதம் வருவதற்குத் தயாராக இருப்பதாக அர்ஜென்டினா அணி நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால், ஜூன் மாதம் கேரளத்தில் பருவமழைக் காலம் என்பதால், வேறு மாதத்தில் வரும்படி கேரள அரசுத் தரப்பு கேட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து, 2025 ஒக்டோபரில் அர்ஜென்டினா அணியின் கேரள சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் என அர்ஜென்டினா அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.” எனவும் அப்துரகிமான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கேரளத்தில் கால்பந்துத் திறனாளர்களை வளர்க்க, அம்மாநிலத்துடன் பங்காளித்துவம் செய்துகொள்ள அர்ஜென்டினா ஆர்வமாக உள்ளது. எதிர்காலத்தில் கேரள அரசாங்கத்தின் ‘கோல்’ திட்டத்தின்கீழ் 5,000 குழந்தைகளுக்கு அர்ஜென்டினா கால்பந்துச் சங்கம் பயிற்சி வழங்கும்.” என்றும் கேரள மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வி.அப்துரகிமான் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin