கொழும்பு – புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், குறித்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேல்மாகாண ஆளுநரின் உத்தரவுக்கமைய குறித்த கடைகளை அகற்றுவதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, பொலிஸார் பேக்ஹோ இயந்திரங்களுடன் குறித்த இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
தொடர்ந்து, மேல்மாகாண ஆளுநரின் பிரநிதியினால் கடைகளை அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலே, கடைகளை அகற்றும் நடவடிக்கையினை பொலிஸார் இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.