மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை அந்த போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிய காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுப்பார்க்கும் இடத்தில் இந்த சந்தேக நபர் 110 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஜீ.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனை தவிர காத்தான்குடி அலியார் சந்தியில் 45 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 29 வயதான நபரும், 190 கிராம் அபினுடன் 54 வயதான நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகன தரிப்பிடத்தில் கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏனைய இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.