இலங்கையின் பொருளாதாரம் ஸ்தரத்தன்மை அடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகள் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகள் இன்னும் பெருமளவிலான மக்களை சென்றடையவில்லை.
சர்வதேச நாணய நிதியம் வழங்கும் இலக்குகளை அடைய இலங்கைக்கு சொத்துவரி பெரும் உறுதுணையாக இருக்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று ஜனவரி 11 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்து கடந்த ஒரு வாரமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த செயல்முறைகளை ஆய்வு செய்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், தனது வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது மீளாய்வை நிறைவு செய்தமைக்கு வாழ்த்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.