யாழ்ப்பாணம், வாங்கலவாடி கடற்கரை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 06 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டள்ளது.
நயினாதீவு கடற்படை பிரிவினரால் நேற்றைய தினம் இந்த தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, வாங்கலவாடி கடற்கரை பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான மூன்று பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த பொதிகளை சோதனையிட்ட போதே, ஈரமான நிலையில் 06 கிலோ மற்றும் 40 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
இவற்றின் மொத்த பெறுமதி சுமார் 02 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவை ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை கடற்படையினரும், ஊர்காவற்றுறை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.