யேமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக இடைமறித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
செங்கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்க கப்பல்களை குறிவைத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணையை செலுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், குறித்த ஏவுகணையை அமெரிக்க போர் விமானம் தாக்கி அழித்துள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், யேமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களை இலக்கு வைத்து தாக்கி வருகின்றனர்.
இதன் காரணமாக, அந்த தாக்குதல்களை தடுக்கும் வகையில், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தலைமையிலான கூட்டு இராணுவக் குழு தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக செங்கடல் பகுதியில் பதற்றம் நீடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.