எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்பு அறிக்கைகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டி கரயலித்த பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என பல கட்சிகளில் இருப்பவர்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்ற சந்தேகமும் உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெறும் அனுரகுமார திஸாநாயக்கவை பதவிப்பிரமாணம் செய்ய முடியாதபடி பிரதம நீதியரசரும் கடத்தப்படலாம் என்ற சந்தேகம் உள்ளது.
அதேவேளை கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி சமூகத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களை மாத்திரமே கட்சியில் இணைத்து வந்தது.
எனினும் சமூகத்திற்கு நன்மை செய்யக்கூடிய அனைவரையும் தேசிய மக்கள் சக்தியில் இணைத்து வருகின்றோம் எனவும் லால்காந்த தெரிவித்துள்ளார்.