நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் இன்று காலை 8 மணி முதல் அரச வைத்தியசாலைகளில் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறைவுகாண் மருத்துவ ஊழியர்களின் கூட்டு ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று காலை 08 மணிமுதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
35 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.