தளபதி 68 படக்குழு இலங்கையில்

தளபதி 68 படக்குழுவினர் இலங்கையில் படப்பிடிப்பு வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில்  விஜய், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், பிரேம்ஜிஉள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் நடைபெற்றது.

தளபதி 68வது படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பே இயக்குநர் வெங்கட் பிரபு இலங்கை வந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் நடிகர் விஜய்யும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

தற்போது இலங்கையில் இருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபுவை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin