இலங்கையின் மூத்த நடிகரும் திரைப்பட இயக்குனருமான ரெக்ஸ் கொடிப்பிலி தனது 85வது வயதில் காலமானார்.
அவரது குடும்ப வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
கொடிப்பிலி 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இரண்டு படங்களைத் தயாரித்தார்.
அத்துடன், 2019 ஆம் ஆண்டு ஜானாபிமானி கௌரவ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கொடிப்பிலி 1971 ஆம் ஆண்டு கத்துரு முவத் என்ற தனது முதல் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
முவன் பெளஸ்ஸா படத்தில் ‘கதிரா’, ரக்தா படத்தில் ‘டானு’, ‘ரத்னே படத்தில் அய்யா’ போன்ற அவரின் கதாபாத்திரங்கள் மிகவும் பேசப்பட்ட கதாபாத்திரங்கள் ஆகும்.
அவரின் மறைவுக்கு இலங்கை திரைப்பட துறையைச் சார்ந்த பலரும் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.