பிரித்தானிய இறைச்சி லொறியில் ரகசிய மறைவிடம்

வட அயர்லாந்தில் இறைச்சியை ஏற்றி வந்த லொறியை காவல்துறையினர் சோதனை செய்த போது உள்ளே ஒரு ரகசிய மறைவிடம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதன்படி , இறைச்சிகளுக்கு அடியில் பலகையால் அமைக்கப்பட்டிருந்த மறைவிடத்துக்குள் 118 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

100 போதைப்பொருள் பொட்டலங்கள் இறைச்சிகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அவற்றின் மதிப்பு 10 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

இந்த நிலையில் 30 வயதுடைய ஒரு நபர், வாகனம் ஓட்டுவது தொடர்பான குற்றங்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

விசாரணை தொடர்வதால் மேலதிக விசாரணைகளுக்கு அனுமதிக்கும் வகையில் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin