யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஆறுபேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து ஊர்காவற்துறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலங்கை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.