“குறி வச்சா இரை விழனும்” ரஜினியின் வேட்டையன்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’

அவரின் அடுத்த படமான ‘தலைவர்170’ -ஐ ஜெய்பீம் புகழ் த.செ ஞானவேல் இயக்கி வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் ’தலைவர் 170′ படத்தின் பெயர் மற்றும் பிறந்தநாள் டீசர் வீடியோ இன்று ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி இப்படத்திற்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு மாஸாக ரஜினிகாந்த் நடந்து வரும் காட்சிகளை கொண்ட டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin