பிரபல மலையாள திரைப்பட நடிகை லக்ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
24 வயதான லக்ஷ்மிகா காக்கா, உயரே, சவுதி வெள்ளக்கா, பஞ்சவர்ண தாத்தா, ஒரு யமதன் ப்ரேமகதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பை தாண்டி ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் லக்ஷ்மிகா.
இந்நிலையில் வங்கிப் பணியின் போது லக்ஷ்மிகா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் கூறப்படுகிறது.
வெறும் 24 வயதில் அவர் உயிரிழந்தது திரைத்துறையினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.