2024 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த இடங்கள்

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்வையிட சிறந்த இடங்களில் இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து பீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டெழுந்து புதிய உணவுத் திருவிழாவுடன் பதிலடி கொடுக்கிறது.

Condé Nast Traveller இன் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் ஆசியாவில் பார்க்க வேண்டிய 11 சிறந்த இடங்களின் பட்டியல், உலகெங்கிலும் உள்ள பங்களிப்பாளர்களால் முழுமையாக அறியப்பட்டது.

இவ்வாறான நிலையில், இந்த ஆண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாதங்களிலும் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 100,000 என்ற எல்லையை தாண்டியுள்ளது.

மேலும், நவம்பர் மாதம் முதல் 15 நாட்களில் 74000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor