யாழ் பருத்தித்துறை – கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.