கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது!

சந்தேகநபர் ஒருவரின் வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக போலி கடிதம் தயாரித்து, கட்டுப்பாளருக்கு தொலைநகல் மூலம் கடிதம் அனுப்பிய குற்றச்சாட்டில் கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (13.10.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட 7 குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட சந்தேகநபருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக குறித்த பதிவாளர் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு இந்த போலி கடிதத்தை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வழக்கு ஆவணம் கிடைக்கவில்லை
விசாரணையின் போது சம்பவம் தொடர்பான விசாரணைக் கோப்பு காணாமல் போனது தெரியவந்துள்ளதுடன், காணாமல் போன வழக்கு பதிவு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போலி கடிதத்தை தட்டச்சு செய்த அதிகாரி தனது சாட்சியத்தில், தட்டச்சு செய்வதற்காக குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு அனுப்ப பதிவாளரிடம் இருந்து வரைவோலை பெற்றதாகவும், ஆனால் வழக்கு ஆவணம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நீதிமன்றப் பதிவாளர் மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor