கியூடெக் ஏற்பாட்டில் பெண்களுக்கு தொழில் பயிற்சி

கியூடெக் குழுவினரின் ஏற்பாட்டில் மணியந்தோட்டப் பகுதியில் சுயதொழிற் துறையினை மேற்கொள்ளவுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தொழிற்துறையினை எதிர்பார்க்கும் யுவதிகளுக்கான சந்தன குச்சி செய்கை, சலவைக்கரசல் ,லிக்குவிற் தயாரிக்கும் பயிற்சி நெறி இன்று காலை மணியந் தோட்டப் பயிற்சி நிலையத்தில் கியூடெக் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜோசஷ்ப் பாலா தலைமையில்நடைபெற்றது.

இப் பயிற்சிநெறி ஒரு மாத கால பயிற்சியாக காணப்படுகின்றது.இதில் கலந்து கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பப் பெண்கள் யுவதிகள் ஆர்வத்துடன் பங்குபற்றிக் கொண்டனர்.

 

Recommended For You

About the Author: S.R.KARAN