யாழில் அரிசி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பல லட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக நாசமாகியுள்ளது.
யாழ்-தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்ட, அளவெட்டி வடக்கு பகுதியில் இன்றையதினம் (09.09.2023) அரிசி ஆலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டு இன்று காலை 8.00 மணியளவில் அரிசி ஆலை திறக்கச் சென்றபோது, அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அருகாமையில் உள்ளவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இதன்போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி ஆலை இயந்திரங்கள் ஏனைய உபகரணங்கள் தளபாடங்கள் என்பன எரிந்து முற்றாக நாசமாகியுள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் அரிசி ஆலை உரிமையாளரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.