கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் பழங்கள்

கொலஸ்ட்ரால் என்பது வழுவழுப்பான ஒரு மெழுகு போன்ற பொருள். இது உடலுறுப்புக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாது.

ஏனெனில் கொலஸ்ட்ராலானது செல்களை உருவாக்கவும், சரிசெய்யவும் மற்றும் ஹார்மோன்களை உருவாக்கவும் பெரிதும் உதவி புரிகிறது.

கொலஸ்ட்ரால் அளவு

ஆனால் இந்த கொலஸ்ட்ரால் உடலில் மிதமான அளவில் இருக்க வேண்டும்.

அளவுக்கு அதிகமானால் அது உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் நிறைய பேர் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.

கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் இதய நோயினாலும் பாதிக்கப்படுகின்றனர். எப்படி உணவுகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறதோ அதேப் போல் அந்த கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உணவுகள் உதவி புரிகின்றன.

அதுவும் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்கள் மூலமாகவே கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம். இப்போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் சில பழங்களைக் காண்போம்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டசியம் போன்றவை வளமான அளவில் உள்ளன.

அதுவும் சிவப்பு மற்றும் பச்சை ஆப்பிள்களில் அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன.

அதற்கு ஆப்பிளை காலை உணவின் போதோ அல்லது ஸ்நாக்ஸ் வேளைகளிலோ சாப்பிடலாம்.

அவகேடோ

அவகேடோ பழத்தில் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளன. அதுவும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமான அளவில் உள்ளன.

இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகின்றன.

அவகேடோ பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்றவைகளும் ஏராளமான அளவில் உள்ளன.

பெர்ரிப் பழங்கள்

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் மற்றொரு அற்புதமான பழங்கள் தான் பெர்ரிப் பழங்கள்.

இந்த பழங்களை தினமும் ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பெர்ரி பழங்களில் இதயத்தைப் பாதுகாக்க தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன.

அதுவும் ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின் சி கொலஸ்ட்ராலைக் குறைக்க தேவையான சத்தாகும்.

எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், தங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

Recommended For You

About the Author: webeditor