வவுனியாவில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவமானது வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதி விளக்கு வைத்தகுளத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம் பெற்ற விபத்து
யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வவுனியாவில் இருந்து புளியங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இவ் விபத்தில் கண்டியை சேர்ந்தவரும் புளியங்குளம் பொலிஸ் கான்ஸ்டபிளுமான 55 வயதுடைய கருணாதிலக்க என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.