நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (03) கன மழை பெய்து வருவதாலும், சீரற்ற காலநிலை நிலவுவதாலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கையினை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
இந்த மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதால் தொடர்ந்து மழை பெய்தால் மண்சரிவு ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்து அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு குறித்த நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.