எரிபொருளுக்கு அதிகமான வரி! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

இலங்கையில் எந்த விலைச்சூத்திரத்தின் அடிப்படையிலும் எரிபொருள் விலை அதிகரிப்பானது மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க Champika Ranawaka தெரிவித்துள்ளார்.

இந்த விலை அதிகரிப்பானது மக்கள் மீது வரிச்சுமையை திணித்து மக்களை ஒடுக்குவதே ஒரே நோக்கம். ஒவ்வொரு லீற்றர் எண்ணெயிலிருந்தும் 150 ரூபாவுக்கும் அதிகமான வரி அறவிடப்படும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் அதிகரிப்பு இல்லாத வேளையில் டொலரில் மாற்றம் இல்லாத வேளையில் எவ்வாறான விலை சூத்திரத்தை பயன்படுத்தி விலையை அதிகரிக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் கூட்டுத்தாபனம் கடந்த மாதம் 60 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor