கண்டி – அக்குரனை பகுதியில் வெடிப்பொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு பேர் அக்குரணை நகரில் வைத்து நபர் ஒருவருக்கு பொதியொன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகமடைந்த பொலிஸார் அப் பொதியை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாய பொருட்களுடன் 3 பேர் கைது | 3 People Arrested With Dangerous Goods
கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள்
இதன்போது அந்த பொதியிலிருந்த எஸ்.ஜீ ரக 7 தோட்டாக்களும், ரி 56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்களும், 5 வெற்றுத் தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அக்குரனை, றம்பொடை மற்றும் அட்டபாகை பகுதியைச் சேர்ந்த 39 முதல் 48 வயதுக்கிடைப்பட்டவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் இன்றைய தினம் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.