ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதிக்கு ஏற்ற நிலையிலேயே நெல் கையிருப்பு உள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது 45 இலட்சம் கிலோகிராம் நெல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக சபையின் தலைவர் புத்திக்க இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
நெல் கிடைக்காத காரணத்தினால் மூடப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை நெல் களஞ்சியசாலை விவசாய அமைப்புகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் திறப்பது தொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.