இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் இந்தியா

தேசியப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிடம், இந்தியா Dornier-228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானத்தை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.

இவ்விமானம் இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கையளிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கைக்கு கையளிக்கப்பட்ட டோர்னியர்-228 விமானம் வருடாந்த பராமரிப்புக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டிருந்தது.

அவ்விமானத்திற்கான மாற்று கண்காணிப்பு விமானமே இவ்வாறு இந்தியாவால் கையளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு பாதுகாப்பு கலந்துரையாடல் கடந்த (09.01.2018) அன்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது இந்தியாவில் இருந்து டோர்னியர் ரகத்திற்கு இணையான கடல்சார் கண்காணிப்பு விமானங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதுடன், கடல்சார் கண்காணிப்பில் இலங்கையின் திறன்களை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகக் காணப்பட்டது.

இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய அரசாங்கம் இந்த ஆலோசனைகளின் போது வலுவான நடவடிக்கைகளை எடுத்தது.

இந்திய கடற்படையின் ஒரு பகுதியாக இருந்த டோர்னியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கைக்கு இலவசமாக வழங்க முடிவு செய்தது.

இதன் பிரகாரம் இந்த விமானத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கட்டுநாயக்காவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: webeditor