லங்கா சதொச நிறுவன இரண்டு பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை 243 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 400 கிராம் பால் மாவின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1080 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ் விலை குறைப்பு இன்று முதல் அமுலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.