யாழ் வரும் முப்படை பிரதானி சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாவற்குழி பகுதியிலுள்ள விகாரையில் இடம்பெறவுள்ள மத நிகழ்வில் சவேந்திர சில்வா மற்றும் 128 பௌத்த பிக்குகள் பங்கேற்கவுள்ள நிலையிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எழுதப்பட்ட பதாதைகள்

இதன் போது தமிழர் தேசத்தில் பௌத்த விகாரை எதற்கு? இனப்படுகொலையாளி சவேந்திர சில்வாவே வெளியேறு, நிறுத்த நிறுத்து பௌத்த மயமாக்கலை நிறுத்து, வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு, நாற்குழி விகாரை சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் அடையாளம், திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை நிறுத்து, நாவற்குழி தமிழர் தேசம், தமிழர் தேசத்தில் புத்த கோயில் எதற்கு, ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor