லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்றைய தினம் (05.03.2023) வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்திற்கொண்டு உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரிக்கப்போவதில்லை என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் கூறியுள்ளது.

எரிவாயு விலை
தற்போதைய எரிவாயு விலை 12.5 கிலோ கொள்கலன் 4,743 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலன் 1,904 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயு கொள்கலன் 883 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்து.

Recommended For You

About the Author: webeditor