கஞ்சாவினை சூட்சுமமாக பதுக்கி விற்பனை செய்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் சங்கபுரம் கிராமத்தில் வைத்து சந்தேக நபரான 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதானவராவார்.
இக் கைது நடவடிக்கையானது இன்று மாலை அக்கரைப்பற்று இராணுவ முகாம் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேக பெண் கைதானார்.
மேலும் இவ்வாறு கைதான சந்தேக நபர் வசம் இருந்து 800 கிராம் நாட்டு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கை வெல்லாவெளி பொலிஸார் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.