யாழில் பட்டா வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து பட்டா ரக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 29 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்சுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

பட்டா ரக வாகனம் ஒன்றை பளை – முகமாலை பகுதியில் வழிமறித்து பொலிஸார் நடத்திய சோதனையில் வாகனத்திற்குள் சூட்சுமமான முறையில் மறைக்கப்பட்டிருந்த கஞ்சா கண்டுபிடிக்கபட்டுள்ளது.

வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 29 கிலோ 150 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

Recommended For You

About the Author: webeditor