பிக்பாஸ் வீட்டில் உள்ள குளியல் அறையில் பெண் போட்டியாளர் ஒருவர் குளிக்கும் போது அதனை சக போட்டியாளரான அமுதவாணன் எட்டிப்பார்க்கும் காணொளி சமுக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமுதவாணன் குறித்த சர்ச்சைக்குரிய காணொளி ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் குளியல் அறையில் ஜனனி குளிக்கும் போது வெளியே நிற்கும் அமுதவாணன், மைக்கை கழற்றி வைத்துவிட்டு எட்டிப்பார்க்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
அப்போது அமுதவாணன் மைக்கை மாட்டுங்க என பிக்பாஸ் குரல் ஒலித்ததும் அவர் பதறும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.
அமுதவாணனின் இந்த மோசமான செயலுக்கு பிக்பாஸ் ரசிகர்களும் நெட்டிசன்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை சமூக வலைதளத்தில் அமுதவாணனுக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் பார்வையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Breaking : Creepy behaviour by #Amuthavanan. He is peeking womens dressing room 😳🤢. We can clearly see the discomfort from her. Really worried about #Janani now. @ikamalhaasan sir are you watching?#BiggBossTamil6 #biggbosstamil#Vikraman #Shivin #Azeem pic.twitter.com/UWyJpIs2EY
— Kakashi Sensei (@KakshiHatake001) November 23, 2022
மேலும், சற்று நன்றாக கவனித்து பார்த்தால் உள்ளே இருப்பது பெண் போட்டியாளரா என்பது உறுதியாக தெரிய வில்லை. அது ஜனனி தான் என்பது சமூக ஊடகங்கள் வாயிலாக வைரலாகும் விடயமே.
எனவே, பிக்பாஸ் தான் அங்கு என்ன நடந்தது என்ற முழுவிபரங்களை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஒரு வேளை, அது உண்மையாக இல்லாமலும் இருக்கலாம். பிக்பாஸ் என்றலே சர்ச்சை என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.