ஜேர்மனியில் தீவிரமடையும் இளைஞர்களின் பேரணி: காவற்துறையினருடன் மோதல்!

ஜேர்மனியில் தீவிரமடையும் இளைஞர்களின் பேரணி: காவற்துறையினருடன் மோதல்!

ஜேர்மனி முழுவதும் கல்வித் தரம் மேம்பாடு, வாழ்க்கைச் செலவினங்களைக் குறைத்தல் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை வலியுறுத்தி ‘Gen Z’ தலைமுறை இளைஞர்கள் முன்னெடுத்துள்ள பாரிய போராட்டங்கள் பல இடங்களில் காவற்துறையினருடன் மோதலில் முடிந்துள்ளன.

போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்: கல்வித் தரத்தை உயர்த்துதல், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்குத் தீர்வு காணுதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சமூக நீதி கோரி இளைஞர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

பரவலான நகரங்கள்: தலைநகர் பேர்லின் (Berlin), ஹம்பேர்க் (Hamburg) உட்பட பல முன்னணி நகரங்களில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசின் நிதி ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு: கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளுக்கான நிதியைக் குறைத்துவிட்டு, போர்களுக்கும் இராணுவக் கட்டமைப்புக்கும் பில்லியன் கணக்கான யூரோக்கள் செலவிடப்படுவதாகப் போராட்டக்காரர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

கட்டாய இராணுவச் சேவைக்கு எதிர்ப்பு: மீண்டும் கட்டாய இராணுவச் சேவையைக் கொண்டுவருவதற்கான முன்மொழிவுகள் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

பலஸ்தீன ஆதரவு முழக்கம்: அமைதி, பலஸ்தீன விடுதலை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

சமூக ஊடகங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படும் இந்தப் போராட்டங்கள், ஜேர்மனியைத் தாண்டி ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலும் இளைய தலைமுறையின இடையே பரவி வரும் அதிருப்தியின் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முன்னெடுக்கப்பட்ட மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்களின் உந்துதலில், ஜேர்மனியில் ‘Gen Z takes charge’ (Gen Z regelt) என்ற பெயரில் இந்த மாபெரும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Recommended For You

About the Author: admin