வெள்ளப் பாதிப்பைக் குறைக்க இலங்கைக்கு ரூ. 456 கோடி நிதியுதவி வழங்கும் ஜப்பான்!

வெள்ளப் பாதிப்பைக் குறைக்க இலங்கைக்கு ரூ. 456 கோடி நிதியுதவி வழங்கும் ஜப்பான்!

கொழும்பு மாநகரப் பகுதி மற்றும் களனி கங்கை பள்ளத்தாக்கில் ஏற்படும் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்காக, இலங்கைக்கு 4,560 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்க ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகமான JICA மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் இதற்கான மானிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 

இந்தத் திட்டத்தின் கீழ், வினாடிக்கு 15 கன மீற்றர் நீரை வெளியேற்றக்கூடிய நவீன நீரேற்று நிலையம் அமைக்கப்படவுள்ளது. அத்துடன், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளும் நிறுவப்படவுள்ளன.

 

இதன் மூலம் வத்தளை, பேலியகொடை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைத்து, மக்களின் பாதுகாப்பையும் நகர்ப்புற பொருளாதார நடவடிக்கைகளையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin