கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளருக்கு ஒக்டோபர் 28 வரை விளக்கமறியல்!
ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

