வட்டவளை ரயில் நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!
இலங்கையின் போக்குவரத்து அமைச்சு, இலங்கை ரயில்வே திணைக்களம், Clean Sri Lanka திட்டம் மற்றும் இலங்கை இராணுவம் ஆகியன இணைந்து வட்டவளை ரயில் நிலையத்தைப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளன.
ரயில் நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில் இந்தப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், ரயில் நிலையத்தின் வசதிகளையும் சுற்றுப்புறச் சூழலையும் மேம்படுத்துவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

